சிறப்பு ரயில்களில் பயணிகளுக்கு தலா ரூ. 600 மட்டுமே கட்டணம்

0 1030

சிறப்பு ரயில்களில் பயணிகளுக்கு தலா 600 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுவதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் மெயில் மற்றும் விரைவு ரயில்களுக்கான இயல்பான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுவதாக ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார்.

சிறப்பு ரயில் ஒன்றை இயக்க 75 முதல் 80 லட்சம் ரூபாய் செலவு பிடிக்கும் என்றும் ஆனால் அதில் 15 சதவீத வருவாய் மட்டுமே கிடைப்பதாகவும் அவர் கூறினார்.  4450 சிறப்பு ரயில்கள் மூலம் 60 லட்சம் புலம் பெயர் தொழிலாளர்கள் வீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments