சுஷாந்த் சிங் ராஜ்புத் இறப்பு தொடர்பான புகைப்படங்களை வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை

0 2394

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறப்பு தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில் அது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் சுஷாந்த் தனது மும்பை இல்லத்தில் இறந்து கிடந்தது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மகாராஷ்டிர சைபர் கிரைம் போலீசார் தங்கள் டிவிட்டர் பதிவில், அத்தகைய புகைப்படங்களை இனி பகிரக்கூடாது என்றும், ஏற்கனவே பகிர்ந்தவர்கள் அவற்றை நீக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments