2 ஞாயிறுகளில் தளர்வின்றி முழு ஊரடங்கு

0 4426

சென்னையில் 12 நாட்களுக்கு அமல்படுத்தப்படும் ஊரடங்கு சமயத்தில் வரும் 2 ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும், எவ்வித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வரும் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த 12 நாட்களில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் சில கட்டுப்பாடுகளுடன் தளர்வளிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் வரும் 21 மற்றும் 28 ஆம் தேதி இரு ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதாவது 21ம் தேதிக்கு முந்தைய நாளான ஜூன் 20 நள்ளிரவு 12 மணி முதல் அடுத்த நாளான 22ம் தேதி காலை 6 மணி வரையிலும் எவ்வித தளர்வுமின்றி ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

அதே போல் 28ம் தேதி வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய நாளான ஜூன் 27 நள்ளிரவு 12 மணி முதல் அடுத்த நாளான 29ம் தேதி காலை 6 மணி வரையிலும் தளர்வுகள் ஏதுமின்றி ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இவ்விரு நாட்களிலும், பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர வேறு எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது.

அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தவிதமான செயல்பாடுகளும் அனுமதிக்கப்பட மாட்டாது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் காலத்தில் இது மிகவும் தீவிரமாக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கும், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் ஒரு நாளைக்கு இருமுறை கிருமி நாசினி தெளிக்கப்படும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments