மேற்கு மாம்பலத்தில் 200க்கும் மேற்பட்ட கடைகளை அடைக்க உத்தரவு

0 2269

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால், அடுத்த 15 நாட்களுக்கு அங்குள்ள 200க்கும் மேற்பட்ட கடைகளை அடைக்க போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

கோடம்பாக்கம் மண்டலத்தில் பாதிப்பு 3000ஐ கடந்துள்ள நிலையில், மேற்கு மாம்பலத்தில் மட்டும் 150க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிருந்தாவன் தெரு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதே போல் வீராசாமி தெரு, ஜூப்ளி தெரு, திருமூர்த்தி தெரு, ஸ்டேசன் தெரு பகுதிகளிலும் பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது.

இந்த பகுதி மக்கள் ஆரியகவுடா சாலையில் தான் பொருட்களை வாங்க குவிவதால், அங்கு முழு அடைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. சாலை முற்றிலும் மூடப்பட்டு, போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments