சுஷாந்த் சிங் ராஜ்புட் முதற்கட்ட உடற்கூறு ஆய்வு முடிவு

0 10875

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தூக்கில் தொங்கியதாலேயே உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட உடற்கூறு ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பை பாந்த்ராவிலுள்ள தனது இல்லத்தில் ஞாயிறன்று சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்த போலீசார், வீட்டில் சோதனையிட்டதில் தற்கொலைக் குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்தனர்.

தொடர்ந்து ஜுகு பகுதியிலுள்ள கூப்பர்((Cooper)) மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முதற்கட்ட அறிக்கையில் தூக்கில் தொங்கியதன் மூலமே கழுத்து நெறிக்கப்பட்டு சுஷாந்த் உயிர் பிரிந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 6 மாதங்களாகவே மன அழுத்தத்தில் இருந்த வந்த சுஷாந்த் சிங், அதற்காக சிகிச்சை எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அவரது வீட்டில் போலீசார் நடத்திய ஆய்வில் சில மருத்துவ அறிக்கைகளும், கொரோனா தொற்று இல்லை என்பதற்கான குறிப்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதனிடையே சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு பலவீனமானவர் அல்ல என்றும், இதற்கு பின் ஏதோ சதி இருப்பதாக தெரிவித்துள்ள பீகாரை சேர்ந்த எம்.பி பப்பு யாதவ், இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்னதாக சுஷாந்த் சிங்கின் முன்னாள் மேலாளர் திஷா சலியானும் ((Disha Salian)) தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சுஷாந்த் சிங் ராஜ்புட்டுடன் கடைசியாக பேசியவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். மேலும் சுஷாந்தின் செல்போன் அழைப்பை அவரது காதலி என்று கூறப்படும் நடிகை ஏற்காதது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் அந்த நடிகை மற்றும் சில நண்பர்களை விசாரிக்க போலீசார் முடிவெடுத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments