பரிசோதனைக்கு வரும் பொதுமக்கள் பயன்படுத்தும் இருக்கைகள் மூலம் வைரஸ் பரவும் அபாயம்

0 3790

கொரோனா பரிசோதனை செய்யும் மருத்துவ மையங்களில், பரிசோதனைக்கு வரும் பொதுமக்கள் பயன்படுத்தும் இருக்கைகள் மூலம் வைரஸ் பரவும் சூழல் நிலவுவாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.. 

சென்னையில் அரசு மருத்துவமனைகள், தனியார் ஆய்வகங்கள் தவிர்த்துப் பரிசோதனை முகாம்கள், நடமாடும் பரிசோதனை மையங்கள் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் காய்ச்சல், அறிகுறிகள் இருப்பவர்களுக்கு நாள்தோறும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பரிசோதனைக்கு முன்பு ஆட்கள் அமர்ந்திருக்கும் இருக்கைகளைக் கிருமிநாசினி மூலம் தொடர்ந்து சுத்தம் செய்யாததால், வைரஸ் தொற்று உறுதியானவர் ஒருவர் அமர்ந்தாலும் அனைவருக்கும் பரவும் சூழல் உள்ளது.

சென்னை புதுப்பேட்டையில் உள்ள பரிசோதனை மையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்தக் காட்சியைப் போன்ற நிலை தான் பல பரிசோதனை மையங்களிலும் நிலவுகிறது.

சென்னையின் வைரஸ் பரவல் அதிகரிப்புக்கான காரணம் என்ன? எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தும் அதிகாரிகள் பரிசோதனை மையங்களிலும் நிலவும் இது போன்ற கவனக் குறைவைச் சரி செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments