டெல்லியில் கொரோனா சோதனை 6 நாட்களில் 3 மடங்காக உயர்த்தப்படும் - அமைச்சர் அமித் ஷா

0 1700

டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் திட்டத்தின் ஒரு கட்டமாக அடுத்த 6 நாட்களில் சோதனைகளின் எண்ணிக்கை 3 மடங்காக உயர்த்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லி நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், டெல்லி ஆளுநர் அனில் பைஜால், முதலமைச்சர் கெஜ்ரிவால் உள்ளிட்டோருடன் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து, முதல்கட்டமாக அடுத்த 2 நாட்களில் சோதனைகளின் எண்ணிக்கை இருமடங்காக உயர்த்தப்படும் என அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் சில நாட்களில், டெல்லியில் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கொரோனா சோதனை மையங்களை ஏற்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நிலவும் கொரோனா சிகிச்சைக்கான படுக்கை பற்றாக்குறையை சமாளிக்க 500 ரயில் பெட்டிகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனால் மேலும் 8000 படுக்கை வசதிகள் கிடைக்கும் என அமித் ஷாவின் டுவிட்டர் பதிவு தெரிவிக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments