கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை குறைத்தது மகாராஷ்டிர அரசு

0 697

தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை மகாராஷ்டிர அரசு குறைத்துள்ளது.

நாடு முழுவதும் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு முன்பு 4 ஆயிரத்து 500 ரூபாயைக் கட்டணமாக இருந்தது. இந்நிலையில் இந்தக் கட்டணம் குறைக்கப்படுவதாக மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, மருத்துவமனைகளில் சோதனைக்கு 2 ஆயிரத்து 200 ரூபாயும், வீடுகளுக்கு வந்து சோதனை செய்ய 2 ஆயிரத்து 800 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும் தனியார் ஆய்வகங்களில் புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாக வசூலித்தால், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments