வாயால் கெட்ட.. ஜெயில் வார்டன் வைரமணி சஸ்பெண்டு..! சிறையில் சொகுசுக்கு பேரம்

0 8238

சங்கரன்கோவில் கிளைசிறையில் கைதிகளுக்கு சொகுசுவசதி செய்து கொடுக்க காளீஸ்வரி பட்டாசு நிறுவன மேலாளரிடம் பேரம் பேசிய ஜெயில் வார்டன் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். வாய்ஸால் வசமாக சிக்கிய சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கிளை சிறையில் பணிபுரிந்து வருபவர் செங்கோட்டையை சேர்ந்த தலைமை வார்டன் வைரமணி.

இவர் காளீஸ்வரி பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட பட்டாசு ஆலை மேலாளர் ஒருவருக்கு சிறைக்குள் சகல வசதிகளும் செய்து தருவதாக அதே நிறுவனத்தின் மற்றொரு மேலாளரான கோபிநாத் என்பவரிடம் பேரம் பேசியதாக இரு ஆடியோக்கள் வெளியானது. 

அதில் ஒரு ஆடியோவில் ஏற்கனவே 14 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்ட வார்டன் ஒருவர் சம்பந்தப்பட்ட கைதிக்கு எந்த வசதியும் செய்து கொடுக்கவில்லை என்றும், தன்னை கவனித்தால் போதும் சிறையில் இருந்து வெளியே வர திறந்து விடுவேன் என்றும் வைரமணி பேரம் பேசி இருந்ததார்.  

மற்றொரு ஆடியோவில், ஆகஸ்ட் 15ஆம் தேதி சிலவற்றை ஜெயில் நிர்வாகத்துக்கு செய்து கொடுக்க வேண்டும் என்றும், வழக்கறிஞர் ஒருவரின் பெயரை சொல்லி தான் ரயில் நிலையத்தில் இருப்பதாகவும் அங்கு வந்து தன்னை கவனிக்கும் மாறும் வைரமணி பேசியுள்ளார்

கைதியின் நிறுவன அதிகாரியிடம் வைரமணி பேரம் பேசிய ஆடியோ வெளியானதைத் தொடர்ந்து, அது உயர் அதிகாரிகள் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து, நெல்லை சிறைத்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் கிளை சிறை வார்டன் வைரமணியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதன் மூலம் சங்கரன் கோவில் கிளை சிறையில் கைதிகளின் உறவினர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு சகலவசதிகளும் செய்து கொடுத்து வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குற்றவாளிகள் சிறைக்கு செல்ல வேண்டும் என்றால் அஞ்சும் நிலை மாறியதற்கு இது போன்ற வார்டன்கள் தான் காரணம் என சுட்டிக்காட்டும் சமூக ஆர்வலர்கள், தமிழகத்தின் அனைத்து சிறைகளிலும் உயர் அதிகாரிகள் தீவிர ஆய்வு நடத்தி கையூட்டு பெற்றுக் கொண்டு கைதிகளுக்கு வசதிகள் செய்து கொடுத்து வரும் வார்டன்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்..!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments