கிறிஸ்டோபர் நோலனின் டெனட் திரைப்படம் ரிலீஸ் ஒத்திவைப்பு

0 1239

பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் இயக்கத்தில் உருவாகியுள்ள டெனட் (Tenet) திரைப்படத்தின் வெளியீடு, கொரோனா ஊரடங்கு போன்ற காரணத்தினால் 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்செப்சன், தி டார்க் நைட் ரைசஸ், டன்கிரிக் போன்ற வெற்றி படங்களை இயக்கிய கிறிஸ்டோபர் நோலன், டெனட் எனும் ஆக்சன் திரில்லர் படத்தை இயக்கியுள்ளார்.

வார்னர் பிரதர்ஸ் தயாரித்துள்ள அந்த படம், ஜூலை 17ம் தேதி வெளியிடப்படும் (Release) என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கால் பல நாடுகளில் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால், போதிய வசூல் கிடைக்காது என்பது போன்ற காரணத்தினால், ஜூலை 31ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments