சென்னையில் 9 மண்டலங்களில் ஆயிரத்துக்கும் அதிகமாக பாதிப்பு

0 1754

சென்னை கோடம்பாக்கம் மண்டலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை ((3,108) தாண்டியுள்ளது. 

 15 மண்டலங்களிலும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 924ஆக அதிகரித்துள்ளது. இதில் ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக 4 ஆயிரத்து 821ஆக உள்ளது.

தண்டையார்பேட்டை மண்டலத்தில்  3 ஆயிரத்து 781ஆகவும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 3 ஆயிரத்து 464ஆகவும், கோடம்பாக்கத்தில் 3 ஆயிரத்து 108ஆகவும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

அண்ணாநகரில் 2 ஆயிரத்து 781ஆகவும், திருவிக நகரில் 2 ஆயிரத்து 660ஆகவும், அடையாறில் ஆயிரத்து 607ஆகவும், வளசரவாக்கத்தில் ஆயிரத்து 268ஆகவும், திருவொற்றியூரில் ஆயிரத்து 72ஆகவும் உயர்ந்துள்ளது.

15 மண்டலங்களில் 9 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. இதுவரை 14 ஆயிரத்து 614 பேர் குணமான நிலையில், 290 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 13 ஆயிரத்து 493 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments