“நீங்கள் அளித்த கடைசிப் பரிசு இது” - ‘கொரோனா’ உலகை எச்சரித்து உயிர்நீத்த மருத்துவரின் மனைவி உருக்கம்!

0 11498

ற்போது உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா நோய்த் தொற்றைப் பற்றி முதன் முதலில் எச்சரித்து உயிரிழந்த மருத்துவரனான லீ வென்லியாங்குக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இதனை அவரது மனைவி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

image

லீ வென்லியாங், சீனா நாட்டில் உள்ள மருவத்துமனை ஒன்றில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கொரோனா நோய்த் தொற்று உலகளவில் பரவத்தொடங்குவதற்கு முன்பாகவே, "சார்ஸ் போன்ற புதிய வைரஸ் சீனாவில் பரவுகிறது" என்று தனது நண்பர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் எச்சரிக்கை விடுத்தார். ஆனால், அவரது எச்சரிக்கையைப் பொருட்படுத்தாத சீன அரசு, 'வதந்திகளைப் பரப்பவேண்டாம்' என்று எச்சரிக்கை செய்தது.

அதன் பிறகு, லீ வென்லியாங்  எச்சரிக்கை செய்தது போலவே கொரோனா வைரஸ் சீனாவில் வேகமாகப் பரவியது. சீனாவில் மட்டும் 83000 பேருக்கு மேலே நோய் தோற்று ஏற்பட்டது. சுமார் 4,600 பேர் இறந்தனர்.  நோய்த் தொற்றுக்கு லீ  வென்லியாங்கும் இறந்து போனார்.  லீ  வென்லியாங் இறப்புக்கு, அவரது குடும்பத்தாரிடம் மன்னிப்பைக் கேட்டுக்கொண்டது சீன அரசு.

image

இந்த நிலையில் லீ வென்லியாங்கின் மனைவி பியூக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த செய்தியை பியூ சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அந்தப் பதிவில்  லீ வென்லியாங்கின் மனைவி பியூ, "நீங்கள் சொர்க்கத்திலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் எனக்கு அளித்த கடைசிப் பரிசு இது. நான் இவனை மிகவும் அன்பாகப் பார்த்துக்கொள்வேன்" என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments