லடாக் எல்லை நிலவரம் குறித்து முப்படை தளபதிகளுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை

0 2057

லடாக் எல்லை நிலவரம் குறித்து முப்படை தலைமை தளபதி (பிபின் ராவத்), முப்படைத் தளபதிகள் ஆகியோருடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை நடத்தினார்.

லடாக் எல்லையில் சீன ராணுவத்துக்கும், இந்திய ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து இருநாட்டு ராணுவங்கள் குவிக்கப்பட்ட நிலையில், பதற்றத்தை தணிப்பது குறித்து இருநாட்டு ராணுவ கமாண்டர்கள் நிலையிலும், ராஜ்ஜீய ரீதியிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன.

இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதாகவும், பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கையில் இந்தியாவும், சீனாவும் ஈடுபட்டிருப்பதாகவும் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், லடாக் எல்லை நிலவரம் குறித்து முப்படை தலைமை தளபதி , இந்திய ராணுவ தளபதி, கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தியுள்ளார். இதில் விவாதிக்கப்பட்ட விவரம் குறித்து தெரியவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments