ஊரடங்கு காலத்தில் பார்லே ஜி பிஸ்கட் விற்பனை 5 சதவிகிதம் அதிகரிப்பு

0 1596

ஊரடங்கு காலத்தில் பார்லே ஜி பிஸ்கட்கள் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமாக விற்பனை நடைபெற்றுள்ளது.

ஊரடங்கு காலத்தில் வீட்டில் முடங்கி இருந்த மக்களும், தொழிலாளர்களும் பெருமளவில் பிஸ்கட்களை வாங்கி உட்கொண்டுள்ளனர். இதனால் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பார்லே ஜி பிஸ்கட்களின் விற்பனை 5 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும், இது முப்பதாண்டுகளில் இல்லாத வளர்ச்சி ஆகும் எனவும் பார்லே நிறுவனத்தின் மூத்த அதிகாரி மயங்க் ஷா தெரிவித்துள்ளார்.

அரசு முகமைகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் மக்களுக்கு வழங்கிய உணவுப் பொருட்களில் பார்லே ஜி பிஸ்கட் இடம்பெற்றிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட 2 நாட்களுக்குள் மீண்டும் உற்பத்தியைத் தொடங்குவதற்கான அனுமதியைத் தங்கள் நிறுவனம் பெற்றுவிட்டதாகவும் மயங்க் ஷா தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments