அசாமில் ஆயில் இந்தியா நிறுவன எண்ணெய் கிணற்றில் தீ விபத்து

0 1162

அசாமில் உள்ள ஆயில் இந்தியா நிறுவனத்துக்கு (Oil India Limited ) சொந்தமான எண்ணெய் கிணற்றில் (Oil Well ) மிகப்பெரிய தீ விபத்து நேரிட்டுள்ளது. தின்சுகியா மாவட்டத்தில் ஆயில் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் எண்ணெய் கிணறு உள்ளது.

கடந்த 14 நாள்களாக அதிலிருந்து எரிவாயு கசிவு நேரிட்ட நிலையில், இன்று பிற்பகல் திடீரென தீ பிடித்து எரியத் தொடங்கியது

விபத்து குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் முதலமைச்சர் சர்பானந்த சோனோவால் பேசியுள்ளார்.

தீ விபத்து நேரிட்ட பகுதியில் தேசிய பேரிடர் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் சிங்கப்பூரில் இருந்தும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கையாக ஒன்றரை கிலோ மீட்டர் சுற்றளவு பகுதியில் வசிக்கும் 6 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments