வேறுபாடுகளை மோதல்களாக்க வேண்டாம் என ஒப்புக்கொள்ளப்பட்டது - சீனா

0 570

வேறுபாடுகளை மோதல்களாக்க வேண்டாம் என இந்தியாவும் சீனாவும் ஒப்புக்கொண்டதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. அதுகுறித்து கருத்து தெரிவித்த சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங்,
(Hua Chunying)எல்லைப் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண இருநாடுகளும் நெருக்கமான தகவல் தொடர்பைக் கடைபிடித்து வருவதாக இந்தியாவுக்கான சீனத் தூதர் சுன் வெய்டாங் (Sun Weidong) தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டினார்.

எல்லையில் நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் திறனும் விருப்பமும் இரு நாடுகளுக்கும் உள்ளதாகவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments