லடாக் எல்லைப் பகுதியில் சீன ஹெலிகாப்டர்கள் அத்துமீறல்

0 7034

லடாக் எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் இருக்க, அங்கு சீன ராணுவ ஹெலிகாப்டர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையேயான கட்டுப்பாட்டு எல்லையில், சீனப் பகுதியில், கடந்த ஏழெட்டு நாட்களாக சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் பறந்த வண்ணம் உள்ளன. எல்லையில் குவிக்கப்பட்டுள்ள தனது துருப்புக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அவை பறப்பதாக கூறப்படுகிறது.

அதே நேரம் கல்வான் உள்ளிட்ட பகுதிகளில், சீன ஹெலிகாப்டர்கள் இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி பறப்பதும் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது.

சென்ற மாதம் இந்திய-சீன துருப்புக்கள் நேருக்கு நேர் நின்ற பதற்றமான நேரத்திலும், எல்லையை ஒட்டிய பிரதேசங்களில் சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் பறந்ததாகவும், இந்திய ரோந்து போர் விமானங்கள் அவற்றை சீன எல்லைக்குள் விரட்டியதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments