கேரளாவில் யானை இறப்புக்கு காரணமான சம்பவம் தற்செயலான ஒன்று- மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம்

0 3227

கேரளாவில், வெடிமருத்து வைக்கப்பட்ட அன்னாசிப்பழத்தை விழுங்கி யானை உயிரிழந்த சம்பவம், தற்செயலான ஒன்று என, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கேரளாவின் அமைதிப்பள்ளத்தாக்கில் இருந்து உணவு தேடி வந்த 15 வயது கர்ப்பிணி யானை, வெடிமருந்து  வாயில் வெடித்ததால், உண்ண வழியின்றி, பட்டினியதஙர, கடந்த 27 ஆம் தேதி உயிரை விட்டது.

நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் கேரள அரசு இது தொடர்பாக நபர் ஒருவரை கைது செய்துள்ளது.

காட்டுப்பகுதிகளில் நடக்கும் சாகுபடிகளில் காட்டுப்பன்றிகளை விரட்ட பலர் இந்த வகையில் சட்டவிரோதமாக வெடி மருந்துகளை பயன்படுத்துவதாகவும், அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறை இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments