பணமில்லை, படுக்கையுடன் கட்டப்பட்ட முதியவர்... தனியார் மருத்துவமனை செய்த கொடுமை!

0 2254

சிகிச்சைக்கான கட்டணத்தை செலுத்த முடியாத முதியவரை படுக்கையில் கயிற்றால் கட்டிப்போட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்தியபிரதேச மாநில முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.

மத்தியபிரதேச மாநிலம் ராஜ்கார் மாவட்டத்தை சேர்ந்த 80 வயது முதியவர் லக்ஷ்மி நாராயணன். இவர், ஷாஜாபூர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வலிப்பு நோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரின், சிகிச்சைக்காக ரூ. 11, 270 மருத்து பில் வந்துள்ளது. குடும்பத்தினரிடத்தில் ரூ. 5. 000 மட்டுமே இருந்துள்ளது. மருத்துவமனை நிர்வாகம் கண்டிப்பாக முழுத் தொகையையும் செலுத்த வேண்டுமென்று கூறி விட்டது. கொரோனா லாக்டௌன் காரணமாக லக்மி நாராணன் குடும்பத்தினரால் மேற்கொண்டு பணம் திரட்ட முடியவில்லை.முழு கட்டணத்தையும் செலுத்தவும் முடியவில்லை.

இதனால், பணம் செலுத்தாமல் தப்பி விடக் கூடாது என்பதற்காக மருத்துவமனை ஊழியர்கள் முதியவரின் கால், கைகளை படுக்கையுடன் சேர்த்து கட்டியுள்ளனர். மருத்துவமனையில் முதியவர் கட்டிப் போடப்பட்டுள்ள சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் ஜெயினுக்கு தகவல் கிடத்தது. மாவட்ட ஆட்சியரின் தலையீட்டையடுத்து முதியவர் உடனடியாக விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க துணை ஆட்சியர் தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநில முதல்வர் ஷிவ்ராஜ்சிங் சௌகான் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டில், '' ஷாஜாபூர் மருத்துவமனையில் முதியவருக்கு நடந்துள்ள கொடுமை என் கவனத்துக்கு வந்துள்ளது. குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. கடும் தண்டனை அளிக்கப்படும்'' என எச்சரித்துள்ளார் மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத், தன் ட்விட்டர் பக்கத்தில் மருத்துவமனையில் முதியவர் கட்டிப் போடப்பட்டுள்ள வீடியோவை வெளியிட்டு, 'இது மனிதத்தன்மையற்ற காட்டுமிராண்டித்தனமான செயல்' என்று கண்டித்துள்ளார்.

அதே வேளையில், நேயாளிக்கு வலிப்பு நோய் இருந்தாதாகவும் அதறகு எலக்ட்ரிக் க்ஷாக் சிகிச்சை கொடுப்பதற்காக அவரின் கைகள், கால்களை படுக்கையுடன் சேர்த்து கட்டியிருந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments