மாணவர்கள் செமஸ்டர் தேர்வுக்கு தயாராக அண்ணா பல்கலை. அறிவுறுத்தல்

0 51809

இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள குறிப்புகளை பயன்படுத்தி மாணவர்கள் தேர்வுக்கு தயாராகுமாறு அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் செயல்படும் உறுப்புக் கல்லூரிகளில் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் வசதிக்காக www.annauniv.edu என்ற தளத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடக்குறிப்புகள், முந்தைய தேர்வுகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் உள்ளிட்டவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இவற்றை பயன்படுத்தி பயன்படுத்தி செமஸ்டர் தேர்வுகளுக்கு மாணவர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ளவும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments