கொரோனா புதிய பாய்ச்சல் உச்சம் எட்டும் சென்னை

0 3893

தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் தொற்று காரணமாக, சென்னையில் 4 -ஆவது நாளாக ஆயிரம் பேருக்கு மேல், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், சென்னையில் மட்டும் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு, புதிய உச்சத்தை எட்டி உள்ளது. நாளுக்கு நாள், பாதிப்பும், உயிர்ப்பலியும் உயர்ந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் புதிதாக ஆயிரத்து 146 பேர்,கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவால் சென்னையில் பாதிக்கப்பட்டிருப்பது, இது 4- வது நாளாகும். இதனால், சென்னை கொரோனா பாதிப்பு, 21 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

செங்கல்பட்டில் புதிதாக 95 பேரும், திருவள்ளூரில் 80 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். காஞ்சிபுரத்தில் ஒரே நாளில் 16 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

இதுதவிர, தூத்துக்குடியில் புதிதாக 14 பேருக்கும், மதுரையில் 7 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி ஆக, நாகையில் 6 பேர், கொரோனாவால் பாதிக்கப் பட்டு உள்ளனர்.

சென்னையில் மட்டும் 10 ஆயிரத்து 223 பேர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வர, இதுவரை 10 ஆயிரத்து 572 பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவுக்கு இரை ஆன 251 பேரில், 197 பேர் சென்னையைச் சேர்ந்த வர்கள். செங்கல் பட்டில் 14 பேரும், திருவள்ளூரில் 11 பேரும் பலி ஆகி உள்ளனர். காஞ்சிபுரத்தில் 4 பேரும், மதுரையில் 3 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments