உச்சம் எட்டிய கொரோனா தமிழகத்தில் அசுர வேகம்

0 6279

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில், ஒரே நாளில், 19 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 24 மணி நேரத்தில் ஆயிரத்து 458 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டி விட்டது.

உலகை உலுக்கும் கொரோனாவின்பாதிப்பு, தமிழகத்திலும் வேகம் எடுத்து, புதிய உச்சத்தை எட்டி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 458 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. இவர்களில் சவுதி அரேபியாவில் இருந்து திரும்பிய 5 பேர், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பிய ஒருவர் மற்றும் மஹாராஷ் டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் என மொத்தம் 35 பேரும் அடங்குவர்.

இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டி விட்டது. தமிழகத்தில் சுமார் 13 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டோர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஓரே நாளில் 633 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால், கொரோனாவின் பிடியில் இருந்து இதுவரை சுமார்16 ஆயிரத்து 395 பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதுவரை தமிழகத்தில் நடத்தப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 5 லட்சத்து 76 ஆயிரத்து 700 - ஐ எட்டி உள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில், ஒரே நாளில் 19 பேர் வைரஸ் தொற்றுக்கு இரை ஆனார்கள். இவர்களில் 3 பெண்கள் உள்பட 10 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 2 பெண்கள் உள்பட 9 பேர் சென்னை - அரசு மருத்துவமனைகளிலும் மரணம் அடைந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளது.

12 வயதுக்கு உட்பட்டவர்களை பொறுத்தவரை, 797 சிறுமிகள் உள்பட மொத்தம் ஆயிரத்து 638 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.


60 வயதுக்கு மேற்பட்டவர்களில், ஆயிரத்து 180 மூதாட்டிகள் உள்பட மொத்தம் 3 ஆயிரத்து 129 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் 7ஆவது நாளாக ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மட்டும் ஒருவருக்கு கூட, வைரஸ் தொற்று உறுதி ஆக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (Gfx-Out 2)

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments