கொள்ளையர்கள் மூலம் அவர்களை பிடித்த போலீசாருக்கும் பரவிய கொரோனா

0 2627

சென்னையில் நகைக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடித்தவர்களை போலீசார் கைது செய்த நிலையில், கொள்ளையன் மூலம் போலீசார் 6 பேருக்கு கொரோனா தொற்று பரவியதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடபழனியில் உள்ள நகைக்கடை ஒன்றின் பூட்டை உடைத்த மர்மநபர்கள், 10 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட வடபழனி உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார், வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கொள்ளையன்

ஒருவனை கைது செய்தனர். அவனளித்த தகவல் மூலம் மற்றொரு கொள்ளையனையும் கைது செய்து சிறையிலடைத்தனர். சிறை நிர்வாகத்தினர் நடத்திய பரிசோதனையில் அவர்களுள் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவனை கைது செய்த தனிப்படை போலீசாரும் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டனர். அதில் 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments