வெட்டுக்கிளிகளை அழிக்கும் பணியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்

0 1181

பாகிஸ்தானில் விவசாய பயிர்களை சேதபடுத்தி வரும் வெட்டுக்கிளிகளை அழிக்கும் பணியில் ஆயிரகணக்கான ராணுவ வீரர்களை அந்நாட்டு அரசு ஈடுபடுத்தியுள்ளது.

பஞ்சாப், சிந்து, பலூசிஸ்தான்   மாகாணங்களில் விவசாய நிலங்களில் பரவியுள்ள லட்சகணக்கான வெட்டுக்கிளிகள், கண்ணில் தென்படும் பயிர்கள் அனைத்தையும் தின்று வருகின்றன.

இதனால்  பெரும் பாதிப்பை சந்தித்துள்ள பாகிஸ்தான், வெட்டுக்கிளிகளை அழிக்க பூச்சிக்கொல்லி மருந்தை தெளிக்கும் பணியில் ராணுவத்தினரையும், விவசாய அமைச்சகம், உணவுத்துறை அதிகாரிகளையும் களமிறக்கியுள்ளது. இதேபோல் விமானம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்தை தெளிக்கும் பணி மேற்கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments