பாகிஸ்தான் புகாருக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் அதிரடி பதில்

0 902

பாகிஸ்தானில் தீவிரவாதம் குறித்த இந்தியாவின் கருத்தையே ஐநா.பாதுகாப்பு கவுன்சிலிலின் அறிக்கை மறுபடியும் வலியுறுத்தியிருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் தீவிரவாதம் குறித்து ஐநா.பாதுகாப்பு கவுன்சிலின் அனாலிட்டிக் சப்போர்ட் அண்ட் சாங்ஷன்ஸ் மானிட்டரிங் பிரிவு வெளியிட்ட ஆய்வு அறிக்கையை அடுத்து உலக நாடுகளை இந்தியா தவறான தகவல்களால் வழிநடத்திக் கொண்டிருப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.இதற்குப் பின் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்துள்ள வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா, பாகிஸ்தானில் 30 முதல் 40 ஆயிரம்வரை தீவிரவாதிகள் இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பகிரங்க ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாதிகள் இந்தியா, ஆப்கான் போன்ற அண்டை நாடுகளில் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும் தனது மண்ணில் இருந்து இயங்கும் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசு தவறி விட்டது என்றும் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments