புதுச்சேரியில் கொரோனாவால் இறந்தவரின் உடலை சவக்குழியில் அலட்சியமாக வீசும் அவலம்

0 1578

புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடலை சவக்குழியில் அலட்சியமாக வீசி செல்லும் கொடுமையான காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி பரவி வருகிறது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த 40 வயது நபர் புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த போது உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.

மருத்துவமனையில் அவரது உடலை சோதனை செய்ததில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கோபாலன்கடை மயானத்திற்கு அவரது உடலை கொண்டு சென்ற வருவாய் மற்றும் சுகாதாரத் துறையினர் அவரது உடலை சவக்குழியில் வீசி அதன்பிறகு உள்ளே தள்ளும் காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments