ரயில்களில் முன்பதிவு ரத்து டிக்கெட்களுக்கு பணம் திரும்ப வழங்கும் பணி தொடக்கம்

0 900

ரயில்களில் முன்பதிவு ரத்து டிக்கெட்களுக்கு பணம் திரும்ப வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர், சென்னை கடற்கரை, திருமயிலை, மாம்பலம், பரங்கிமலை, தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், பெரம்பூர், உள்ளிட்ட இடங்களில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு பணம் திரும்ப வழங்கப்படுகிறது.

பயணத் தேதியிலிருந்து 180 நாட்கள் வரை டிக்கெட்டை ரத்து செய்து பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றும் ரத்து குறித்த ரயில்வே நிர்வாகத்தின் கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் மட்டுமே பயணிகள் முன்பதிவு மையங்களை அணுகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ரத்து செய்ய போதிய கால அவகாசம் உள்ளதால் தேவையில்லாமல் கவுண்டர்களில் கூட்டம் சேர்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments