சிவில் சர்வீசஸ், வனப்பணி முதனிலைத் தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு

0 1007

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அகில இந்திய பணிகள் மற்றும் இந்திய வனப்பணிக்கான முதனிலைத் தேர்வுகள் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இந்த மாதம் 31 ஆம் தேதி நடக்கவிருந்த இந்த தேர்வுகள், கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டன. இந்த ஆண்டு நடத்தப்படவுள்ள பல்வேறு தேர்வுகள், நியமனங்களுக்கான தேர்வுகள் ஆகியவற்றின் மாற்றியமைக்கப்பட்ட நாள் விவரங்களையும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.www.upsc.gov.in என்ற இணையதளத்தில் அவை குறித்த கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments