ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 3,388ஆக அதிகரிப்பு

0 745

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 388ஆக அதிகரித்துள்ளது. 15 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 693ஆக உயர்ந்துள்ளது.

இதில் ராயபுரம் மண்டலத்துக்கு அடுத்து அதிகபட்சமாக தண்டையார் பேட்டை மண்டலத்தில் 2 ஆயிரத்து 261 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தேனாம்பேட்டை மண்டலத்தில் 2 ஆயிரத்து 136 பேருக்கும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 2 ஆயிரத்து 123 பேருக்கும், திருவிக நகர் மண்டலத்தில் ஆயிரத்து 855 பேருக்கும், அண்ணாநகர் மண்டலத்தில் ஆயிரத்து 660 பேருக்கும், அடையாறு மண்டலத்தில் ஆயிரத்து 42 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

நோய் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 947ஆகவும், குணமானோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 392ஆகவும் உயர்ந்துள்ளது. இதேபோல் 15 மண்டலங்களிலும் பலியானோரின் எண்ணிக்கையும் 166ஆக அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments