விமானங்கள், கப்பல்கள், பேருந்துகள் மூலம் 1.76 லட்சம் பேர் மீட்பு - மத்திய அரசு

0 763

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் பல்லாயிரக்கணக்கானோரை அழைத்துவர இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், ஊரடங்கால் தாயகம் திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியுள்ள, இந்தியர்களை மீட்கும் திட்டத்தில் 3 லட்சத்து 48 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.

இவர்களில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறப்பு விமானங்கள், கப்பல்கள் மற்றும் எல்லை கடந்த பேருந்துகள் மூலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களும் விரைவில் தாயகம் அழைத்து வரப்பட உள்ளனர் என்றார்.

முன்னதாக, 1990ல் சதாம் உசேன் ஈராக் மீது படையெடுத்த போது, அங்கிருந்து ஒரு லட்சத்து 76 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டதை காட்டிலும் இது பெரும் மீட்பு பணி எனவும் அவர் தெரிவித்துள்ள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments