இரண்டு மாத சிசு, யானையின் முதல் கர்ப்பம் - பிரேத பரிசோதனையில் பரிதாப தகவல்

0 2542
கொல்லப்பட்ட யானை


கேரளாவில் கர்ப்பிணி யானைக்கு அன்னாசி பழத்தில், வெடி வைத்து கொடுத்ததில் வாய் பகுதியில் படு காயம் ஏற்பட்டு பரிதாபமாக இறந்து போனது.  மனிதாபிமானமற்ற இந்த செயலால் இந்தியாவே  அதிர்ந்து போனது.  ஆனால், இந்த சம்பவம் மலப்புரத்தில் நடக்கவில்லை. பாலக்காடு மாவட்டம் சைலன்ட் வேலி பகுதியில் நிகழ்ந்துள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர், முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி,கெவின் பீட்டர்சன் உள்ளிட்ட பிரபலங்கள்  இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்திருந்தனர். யானைக்கு அன்னாசி பழத்தில் வெடி வைத்து கொடுத்தவர்களை கண்டறியும் பணியில் கேரள வனத்துறையினர் ,  போலீஸார்  ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், யானையை இரக்கமில்லாமல் கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை  மன்னார்க்காடு (பாலக்காடு மாவட்டம் )போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, யானையின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ''இறந்து போன யானைக்கு வயது 15 வயது இருக்கலாம். விவசாய நிலத்தில் யானை பயிற்களை சாப்பிட்ட போது, அன்னாசி பழம் இருந்துள்ளது. யானை அன்னாசி பழத்தை கடித்த போது, உள்ளேயிருந்த வெடி வெடித்துள்ளது. இதனால், யானைக்கு மேல் தாடை மற்றும் கீழ் தாடைகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. நாக்கும் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 23- ந் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.  காயம் ஏற்படுத்திய வலி காரணமாக , வெள்ளியாற்றுக்குள் இறங்கி வலியை குறைக்க யானை முயன்றுள்ளது.

தொடர்ந்து , இரு நாள்களாக தண்ணீருக்குள் நின்றதால் மூச்சுக்குழாய் சேதமடைந்து, அதன் நுரையீரலும் பாதிக்கப்பட்டுள்ளது. இரு நாள்கள் கழித்து 25- ந் தேதி யானை இறந்து போனது. யானையின் வயிற்றுக்குள் 2 மாத சிசு இருந்தது. இது இந்த யானையின் முதல் கர்ப்பம் '' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments