விமானம், ரயில், பேருந்து பயணிகளுக்கு 7 நாள் தனிமை கட்டாயம்-டெல்லி அரசு

0 1515

டெல்லிக்கு விமானம், ரயில்,பேருந்துகள் மூலம் வரும் பயணிகள் அனைவரும் ஏழு நாட்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முன்பு 14 நாட்களாக இருந்த நிலையில் தற்போது ஒரு வாரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான திருத்தப்பட்ட  அரசாணையை டெல்லி அரசு நேற்று வெளியிட்டது. இதன்படி டெல்லி வரும் பயணிகளுக்கு நோய்த்தொற்று அறிகுறி இல்லாவிட்டாலும் கூட, அவர்கள் ஏழு நாட்களுக்கு கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா சிகிச்சைக்கு மட்டும்  மூன்று மருத்துவமனைகள் டெல்லியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

டெல்லியின் மூல்சந்த் கைராதி லால் மருத்துவமனை, சரோஜ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் சர் கங்காராம் மருத்துவமனை ஆகியவற்றில் 10 சதவீத படுக்கைகளை, வசதி இல்லாத கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு இலவச சிகிச்சையளிக்க வேண்டும் என்றும் மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments