புல்வாமாவில் 3 பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொலை

0 1519

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா அருகே அண்மையில் பாதுகாப்புப் படையினரால் அழிக்கப்பட்ட கார்குண்டு போல மேலும் 2 கார்குண்டுகள், தாக்குதல் சதிக்கு வடிவமைக்கப்பட்டதாகவும்,  அதை  தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புல்வாமாவில் ரகசிய தகவலின்பேரில் பாதுகாப்புப் படையினர் இன்று காலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஸ் இ முகமது அமைப்பில் வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணனாக திகழ்ந்த பெளஜி பாய் என்ற அப்துல் ரெஹ்மான் (Fauji Bhai alias Abdul Rehman) உள்ளிட்ட 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானை சேர்ந்த அப்துல் ரெஹ்மானால் 3 கார் குண்டுகள் வடிவமைக்கப்பட்டதாகவும், அதில் ஒன்று  அழிக்கப்பட்ட நிலையில், மேலும் 2 கார்குண்டுகளை காணாததால் அதைக்கொண்டு எந்நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் தேடும் பணி  நடைபெறுவதாகவும் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments