நாடு முழுவதும் காவல்துறையினர் 49 பேர் கொரோனாவுக்கு பலி

0 2134

நாடு முழுவதும் தற்போது வரை காவல்துறையினர் 49 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்திருப்பதாக இந்தியன் போலீஸ் பவுண்டேஷன் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு பணிகளில் முன்கள பணியாளர்களாக காவல்துறையினர் செயல்பட்டு வரும் நிலையில், உயரதிகாரிகள் முதல் காவலர்கள் வரை பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் பலரும் கொரோனாவை வெற்றிகரமாக எதிர்கொண்டு குணமடைந்து பணிக்கும் திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் 10,783க்கும் மேற்பட்ட காவலர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக, இந்தியன் போலீஸ் பவுண்டேஷனின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 5,791 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 49 பேர் பலியாகியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 400க்கும் மேற்பட்ட காவல் துறையினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments