ஆப்கானிஸ்தானில் 6,500 பாகிஸ்தான் தீவிரவாதிகள் இருப்பதாக ஐநா அறிக்கையில் தகவல்

0 496

ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் வெளிநாட்டு தீவிரவாதிகளில் 6 ஆயிரத்து 500 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என ஐநா சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் பகுப்பாய்வு ஆதரவு மற்றும் பொருளாதாரத் தடைகள் கண்காணிப்புக் குழுவின் அறிக்கையில், ஆப்கானிஸ்தானிற்கு வெளிநாட்டு தீவிரவாதிகளை அழைத்து வருவதில் ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா போன்ற அமைப்புகள் முக்கியப் பங்கு வகிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற செயல்கள் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாகவும், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஏற்பட்ட போதிலும் தாலிபான்கள் மற்றும் அல்கொய்தா இடையே நெருக்கமான நட்பு நீடிப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments