டெல்லியில் மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகள் குறித்த விவரங்களை அறிய செல்போன் செயலி அறிமுகம்

0 452

டெல்லியில் எந்தெந்த மருத்துவமனைகளில் எத்தனை படுக்கைகள், ஐசியூ வசதிகள், வென்டிலேட்டர்கள் காலியாக உள்ளன என்பதை அறிய உதவும் செயலி ஒன்றை முதலமைச்சர் கெஜ்ரிவால் துவக்கி வைத்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதை அறிவித்த அவர், பல மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக இல்லை என பரவலாக புகார்கள் வருவதாகவும், இந்த செயலி மூலம் அந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

https://delhifightscorona.in/beds. என்ற இணையதள முகவரி வாயிலாகவும், 8800007722 என்ற வாட்ஸ்ஆப் எண் வாயிலாக லிங்க் பெற்றும் இந்த செயலியை தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என கெஜ்ரிவால் கூறினார்.

இந்த செயலி தினமும் இரண்டு முறை அப்டேட் செய்யப்படும். குறிப்பிட்ட மருத்துவமனையில் படுக்கைகள் காலியாக இருக்கின்றன என செயலி மூலம் தெரிய வந்த பின்னரும், மருத்துவமனைகள் அனுமதி மறுத்தால் 1031 என்ற எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் என கெஜ்ரிவால் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments