சென்னையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 15 பேர் பலி

0 2064

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 15 பேர் ஒரே நாளில் பலியாகியுள்ளனர்.

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 2 பேரும், கிரீம்ஸ் ரோடு தனியார் மருத்துவமனையில் ஒருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் சிகிச்சையின்போது எடுக்கப்படும் கொரோனா பரிசோதனை போல, உயிரிழப்புக்கு பிறகும் எதனால் பலியாகினர் என்பதை கண்டறிய சோதனை நடத்தப்படும்.

அதுபோல 15 பேருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அந்த முடிவுகள் வந்தபிறகே, கொரோனாதான் உயிரிழப்புக்கு காரணமா என்பதை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments