தமிழகம், புதுச்சேரியில் 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக் கூடும்

0 886

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் துணைத் தலைமை இயக்குநர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள வீடியோவில், தென்மேற்குப் பருவமழை கேரளத்தில் தீவிரமடைந்துள்ளதாகவும், தமிழகத்தில் அதிகப்பட்சமாகக் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments