சிறுமியை நரபலி கொடுத்த தந்தை..!

0 10853

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே 8ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி காட்டுப்பகுதிக்குள் தண்ணீர் பிடிக்கச் சென்றபோது மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக சிறுமியின் தந்தையே அவரை நரபலி செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் 18ஆம் தேதி நொடியூரில் அரங்கேறிய இந்த சம்பவத்தில் மர்ம நபர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றிருக்கலாம் எனக் கூறப்பட்டது.

பிரேதப் பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மகளை நரபலி கொடுத்தால் பெரிய பணக்காரன் ஆகலாம் என்ற பெண் மந்திரவாதி ஒருவரின் பேச்சைக் கேட்டு பன்னீர் செல்வமே மகளைக் கொன்றிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பன்னீர் செல்வத்தையும் அவரது உறவினர் குமார் என்பவரையும் கைது செய்துள்ள போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments