சென்னையில் கொரோனாவுக்கு பலியான பெண்ணின் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கும் தொற்று உறுதி

0 6194

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள நாராயணசாமி தெருவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த பெண்ணின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாரயண சாமி முதல் தெருவில் வசித்து வந்த 58 வயதான பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 31ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து 1ம் தேதி நடைபெற்ற இறுதிச் சடங்கில் குடும்பத்தினர் உள்ளிட்ட வெகு சிலரே பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் கணவர், 2 மகன்கள், கர்ப்பிணி மருமகள் ஆகியோருக்கும், பக்கத்து தெருவில் வசிக்கும் அவர்களது உறவினர் 4 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 5 பேருக்கும் தொற்று பரவியுள்ளது. இதனால் நாராயணசாமி முதல் மற்றும் 2வது தெரு முழுமையாக மூடப்பட்டுள்ளது. மேலும் அறிகுறிகள் இருந்தால் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளவும் அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments