தலைமை செயலகம், முதலமைச்சர் இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

0 361

சென்னை தலைமை செயலகம் மற்றும் முதலமைச்சர் இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலையில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவன், தலைமை செயலகத்திலும், சென்னை பசுமை வழிசாலையில் உள்ள முதலமைச்சர் வீட்டிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்து விட்டு தொடர்பை துண்டித்துள்ளான்.

உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தலைமை செயலகம், முதலமைச்சர் இல்லம் பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டதில் அந்த மிரட்டல், புரளி என்பது தெரிய வந்தது. இதையடுத்து மிரட்டல் விடுத்த நபர் குறித்து, அபிராமபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments