எல்லையில் பாகிஸ்தான் படைகள் மீண்டும் அத்துமீறல்

0 487

காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் மீண்டும் இன்று அத்துமீறித் தாக்கி வருகின்றன.

பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி நெடுகிலும் பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து அத்துமீறித் தாக்கி வரும் நிலையில் இந்திய வீரர்கள் அவர்களுக்கு உரிய பதிலடி கொடுத்து வருகின்றனர்.

மான்கோட் செக்டார் உள்ளிட்ட இடங்களில் இரவு முதல் பீரங்கிகள் துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு இந்திய நிலைகள், எல்லையோர கிராமங்கள் மீது பாகிஸ்தான் படைகள் அத்துமீறித் தாக்கி வருகின்றன.

ஞாயிற்றுக் கிழமையே பாகிஸ்தான் படைகளின் தாக்குதலால் எல்லையோரக் குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் மக்கள் இரவுத் தூக்கத்தை இழந்து வீடுகளை விட்டு வெளியேறி பதுங்கு குழிகளில் தங்கியுள்ளனர்,

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments