நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் மேலும் 8,171 பேருக்கு கொரோனா

0 1128
நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் மேலும் 8,171 பேருக்கு கொரோனா

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 98 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அந்த தொற்றிலிருந்து குணமானோரின் எண்ணிக்கையும் 95 ஆயிரத்து 500ஐ கடந்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8 ஆயிரத்து 171 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 204 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 95 ஆயிரத்து 706ஆகவும், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 598ஆகவும் அதிகரித்துள்ளது.நாடு முழுவதும் மருத்துவமனைகளில் 97 ஆயிரத்து 581 பேர் சிகிச்சை பெறுகின்றனர். அதேநேரத்தில் 95 ஆயிரத்து 527 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக திகழும் மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 13 ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 362ஆகவும் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவுக்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான தமிழகத்தில் 23 ஆயிரத்து 495வும், டெல்லியில் 20 ஆயிரத்து 834ஆகவும், குஜராத்தில் 17 ஆயிரத்து 200ஆகவும் உயர்ந்துள்ளது.

ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், மேற்கு வங்கம் மாநிலத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், பீகார், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஹரியானா, ஜம்மு காஷ்மீர், ஒடிசா, பஞ்சாப் மற்றும் தெலுங்கானாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும், அசாம், கேரளா மாநிலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments