தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. என். லட்சுமணன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0 621
தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. என். லட்சுமணன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. என். லட்சுமணன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கடந்த 2001 ம் ஆண்டு மயிலாப்பூர் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கே. என். லட்சுமணன். மாநிலத் தலைவராக இரு முறை பதவி வகித்து உள்ளார்.

92 வயதான அவர் உடல் நலக்குறைவு காரணமாக சேலத்தில் நேற்று இரவு காலமானார். தகவல் அறிந்த பாஜக நிர்வாகிகளும் தொண்டர்களும் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற உள்ளன.

தமிழக மக்களுக்காகவும், பா.ஜ.க. வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர் கே.என்.லட்சுமணன் என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அவசரநிலை காலத்திலும், சமூகப் பணியிலும் அவர் ஆற்றிய பணிகள் என்றென்றும் நினைவுகூரத் தக்கது என குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments