அமெரிக்காவில் குறைந்தது கொரோனா உயிரிழப்பு

0 1099
அமெரிக்காவில் குறைந்தது கொரோனா உயிரிழப்பு

அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு குறைந்து காணப்பட்டாலும், பாதிப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது.

கெரோனா தொற்றின் மையப்புள்ளியான அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 22 ஆயிரம் பேருக்கு புதிதாகத் தொற்று ஏற்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 60 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 730 பேர் வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தனர்.

இந்த எண்ணிக்கை ஏனைய நாட்களை ஒப்பிடும் போது பாதியளவு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 7 ஆயிரத்தைத் தொட்டு உள்ளது. 11 லட்சத்து 36 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 17 ஆயிரம் பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்களுக்கு நேற்று துக்க தினமாக அனுசரிப்பதாக ஹூஸ்டன் மாகாண ஆளுநர் தெரிவித்தார்.வாஷிங்டனில் வைரஸ் தொற்றின் தாக்கம் மீண்டும் உயர்ந்ததைத் தொடர்ந்து அங்கு பொதுஇடங்களைத் திறக்கும் முடிவுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.நியூ ஜெர்சியில் வெளிப்புற உணவு மற்றும் அத்தியாவசிய சில்லறை விற்பனை ஜூன் 15 அன்று மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

லூசியானா பொதுஇடங்களை வெள்ளிக்கிழமை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ள நிலையில், நியூ ஆர்லியன்சில் இயல்பு நிலை திரும்பாததால் பொது இடங்களைத் திறப்பது குறித்து முடிவெடுக்கவில்லை என்று அந்த மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments