68 நாட்களுக்கு பிறகு இயங்கத் தொடங்கிய ஆட்டோ, டாக்சிகள்

0 1756

சென்னையில் 68 நாட்களுக்கு பிறகு, ஆட்டோ மற்றும் வாடகை கார்கள் இயங்கத் தொடங்கியுள்ளன.

5ஆம் கட்ட ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு, இன்று முதல் சென்னையில் ஆட்டோ மற்றும் டாக்சிகள் இயங்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. இதனால் இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் சென்னை முழுவதும் ஆட்டோக்கள் இயங்கத் தொடங்கியுள்ளன.

ஆட்டோக்களில் ஓட்டுனர் தவிர இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதேபோல, கால்டாக்சி உள்ளிட்ட வாடகை கார்களில் ஓட்டுநர் தவிர மூன்று பேர் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

சென்னையில் அதிக அளவில் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன என்றாலும், டாக்சிகள் அதிக அளவில் இயங்கத் தொடங்கவில்லை. கட்டணங்களை உயர்த்தி தர வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையில் உள்ளதால் ஓலா மற்றும் உபேர் கால் டாக்சி ஓட்டுநர்கள், கார்களை இயக்கவில்லை என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments