கொரோனா தடுப்புப் பணியில் மகாராஷ்டிரத்துக்குக் கேரள அரசு உதவி

0 675
கொரோனா தடுப்புப் பணியில் மகாராஷ்டிரத்துக்குக் கேரள அரசு உதவி

கொரோனா தடுப்புப் பணியில் மகாராஷ்டிர அரசுக்கு உதவுவதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய நூறு பேர் கொண்ட குழுவினரைக் கேரள அரசு அனுப்பியுள்ளது.

நாட்டிலேயே அதிக அளவாக மகாராஷ்டிரத்தில் 65 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தடுப்புப் பணியில் மும்பை மருத்துவர்களுக்கு உதவுவதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள் கொண்ட குழுவை அனுப்பி வைக்குமாறு கேரள அரசுக்கு மகாராஷ்டிர அரசு வேண்டுகோள் விடுத்தது.

இதை ஏற்றுத் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரித் துணைக் கண்காணிப்பாளர் சந்தோஷ்குமார் தலைமையில் நூறு பேர் கொண்ட குழுவைக் கேரள அரசு மும்பைக்கு அனுப்பியுள்ளது. இதை டுவிட்டரில் தெரிவித்துள்ள கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக், முன்கூட்டியே ஒரு குழுவினர் மும்பை செவன்ஹில்ஸ் மருத்துவமனைக்குச் சென்றுள்ளதாகவும், மருத்துவர்களுக்கு எல்லைகள் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments