வரும் 14ந்தேதி GST கவுன்சில் கூட்டம் 

0 721
வரும் 14ந்தேதி GST கவுன்சில் கூட்டம் 

வருகிற 14-ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி காட்சி முறையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். பொது முடக்கத்தால் பொருளாதார நடவடிக்கைகள் குறைந்து வரி வருவாய் மிகவும் சரிந்துவிட்ட நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. மேலும், கொரோனா நோய்த்தொற்று பிரச்னை ஏற்பட்ட பிறகு நடைபெறும் முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத்தின் போது ஜிஎஸ்டி உயர்த்தப்பட மாட்டாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments