செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 68 பேருக்கு கொரோனா

0 935

தமிழக அளவில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக கொரோனா பாதிப்புகளை கொண்டுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில், இன்று ஒரே நாளில் மேலும் 68 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கும், கோயம்பேடு தொடர்பு மூலமும் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனால் அம்மாவட்டத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,162 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 510 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

மீதமுள்ளவர்களுக்கு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னைக்கு அடுத்த படியாக அதிகளவிலான பாதிப்புகளால் செங்கல்பட்டு மாவட்டம் தொடர்ந்து 2ம் இடத்தில் நீடித்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments