ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2,589ஆக அதிகரிப்பு

0 753

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 589ஆக அதிகரித்துள்ளது. 

15 மண்டலங்களிலும்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 980ஆக அதிகரித்துள்ளது. இதில் ராயபுரத்துக்கு அடுத்து அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் ஆயிரத்து 709 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் ஆயிரத்து 557 பேரும், தண்டையார் பேட்டை மண்டலத்தில் ஆயிரத்து 536 பேரும், திருவிக நகர் மண்டலத்தில் ஆயிரத்து 494 பேரும், அண்ணாநகர் மண்டலத்தில் ஆயிரத்து 180 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றில் இருந்து 7 ஆயிரத்து 289 பேர் மருத்துவ சிகிச்சையில் இதுவரை குணமாகியுள்ளனர். 6 ஆயிரத்து 489 பேர் கொரோனா தொற்றுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இதுதவிர்த்து,  சிகிச்சை பலனின்றி 113 பேர் உயிரிழந்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments